Aug 11, 2008

பரிசல்காரனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்

அன்புள்ள பரிசல்காரன்!

நலம். நாடலும் அஃதே!

கவனச் சிதறலுக்கு இடம் கொடாதிருக்கும் பொருட்டுப் புகைப் படங்களையும் வண்ணங்களையும் தவிர்த்து இதை எழுதுகிறேன்.

தங்களின் வலைப்பூ அரும்பாக இருந்தபோதிலிருந்து வாசித்து வருகிறேன். மெள்ள நகர்ந்து, வேகமெடுத்துப் பதிவுகள் மழையாகப் பொழியும் இன்னேரம் வரை உங்களது பதிவுகளை இயன்ற அளவில் வாசித்தும் வருகிறேன்.

அவ்வப்போது எனது கருத்துக்களைப் பின்னூட்டங்களின் மூலமும் தொலைபேசியிலும் ச்சேட்டீலும் தெரிவித்தும் வருகிறேன். இருப்பினும் தற்போது ஒரு கடிதம் - அதுவும் பகிரங்கக் கடிதம் எழுதும் நிர்பந்தம் ஏன் வந்தது? சொல்கிறேன். மேலே படியுங்கள்.

கொஞ்ச நாளாகவே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். இன்று சொல்ல வைத்தது தங்களின் சமீபத்திய பதிவு ஒன்று. அதில் ஓரன்பர் குறிப்பிட்டார் எனச் சொல்லியிருந்தீர்கள். 30%க்கும் அதிகமாக வலைப்பூ தொடர்பாகத் தொலைபேசி அழைப்புக்கள் வந்தால் தொழிலில் கவனச் சிதறல் ஏற்படுமென்று!

ஆம். நண்பரே! அது மட்டுமல்ல! இந்த வலைப் பதிவுலகு என்பதும் ஒரு வகையான போதை போன்றதே. எந்தப் பழக்கமும் கெட்ட பழக்கம் அல்ல என்பது எனது சித்தாந்தம். ஆனால் எப்பழக்கத்திற்கும் நாம் அடிமையாகிவிடக் கூடாது என்பதிலும் உறுதியாய் இருப்பேன்.

ஆனால் நீங்கள் வலைப் பதிவு என்னும் பழக்கத்துக்கு அடிமையாகிவிடக் கூடாது என்பது எனது வேண்டுகோள்.

உங்களுடைய இந்த வயது சம்பாதிக்க வேண்டிய வயது. குடும்பத்தில் அக்கறை மிகக் காட்ட வேண்டிய வயது. தொழிலில் வெறியாய் முன்னுக்கு வருவதையே நினைத்து அதற்கான முயற்சியில் முழு மூச்சாக இயங்க வேண்டிய வயது.

உங்களுடைய உண்மையான ஓய்வு வேளையில் கதை கட்டுரை மற்ற எல்லா இலக்கியப் பணிகளையும் செய்யுங்கள். ஊடகங்களுக்குத் தொடர்ந்து அனுப்புங்கள். உங்கள் திறமை அசாத்தியமானது. நிச்சயம் ஜெயிப்பீர்கள். இன்னொரு பாகியராஜாகக்கூட வரமுடியும். (பாக்கியராஜ் கோவை வரும்போது உங்களுக்குத் தகவல் சொல்கிறேன். அறிமுகப் படுத்தியும் வைக்கிறேன்.)

வலையுலகு ஒரு மிரேஜ். சில சினிமா ரசிகர்கள் இருப்பார்கள். ஒரு நடிகன் படம் ஹிட்டானால் அவனை ஓஹோ என்று புகழுவார்கள். அவன் மார்க்கட் இழந்தால் புது வரவுக்குப் போஸ்டர் ஒட்டப் போய் விடுவார்கள். அதைப் போல வலையுலகிலும் கொம்புசீவிகள் நிறையப் பேர் இருக்கிறார்கள். நான் வலைப் பூவில் எழுத ஆரம்பித்தபோதே வடகரை வேலன் இதுபற்றி என்னை எச்சரித்தார்.

சில கேள்விகளை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

1) காலையில் எழுந்தது முதல் வலைப்பூவில் எதை எழுதுவது என்ற சிந்தனையுடனே இருக்கிறீர்களா?
2) எத்தனை பேர் நமது பக்கத்தைப் படித்து என்ன சொன்னார்கள் என அறியும் ஆர்வத்தோடேயே இருக்கிறீர்களா?
3) இயற்கை உபாதைகளைக் கழிப்பது நீங்கலாக அனைத்தையும் எழுதிக் குவிக்க வேண்டுமென்று நினைக்கிறீர்களா?
4) குடும்பத்தோடு ஆற அமர்ந்து பொழுதைக் கழிக்க முன்பு போல முடியவில்லையா?
5) எப்போதடா கம்பியூட்டர் முன் உட்காரலாம் எனக் காலை முதல் இரவு வரை துடிப்பாயிருக்கிறதா?
6) ஊடகங்களுக்கு உங்கள் ஆக்கங்களை அனுப்ப முடிகிறாதா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் மனச் சான்றின் படி பதில் சொல்லிப் பாருங்கள். உங்களுக்கே தெரியும் நீங்கள் எங்கே போகிறீர்கள் என்பது.

இரவில் நெடு நேரம் உங்களை நெட்டில் காண முடிகிறது.

(“அப்ப நீ மட்டும் அர்த்த ராத்திரியில் நெட்டில் என்ன செய்கிறாய்?” என்கிறீர்களா? உரிய பதில் இருக்கிறது. இங்கே வேண்டாம்.)

இரவு என்பது இறைவன் கொடுத்த வரம். இளைஞரான உங்கள் குடும்பத்துக்குத்தான் அந்த நேரம் சொந்த நேரமே தவிர unproductive, unremunerative, time consuming, tiresome, lenghthy and tedious வலைப் பூவுக்கல்ல.

பகல் பூராவும் முதலாளியின் செல்வம் பெருக உழைத்துவிட்டு நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிட்டுவிட்டு இரவிலும் இந்த வலையுலகில் நடமாடுவது நியாயமா?

எனக்குத் தெரிந்து பனியன் கம்பெனியில் கணக்குப் பிள்ளையாயிருந்த எனது சொந்தக் காரர் தொழிலின் நெளிவு சுளிவுகளைத் தெரிந்துகொண்டு தானே கம்பெனி துவங்கி இன்று கோடீஸ்வரராய் இருக்கிறார்.

இரண்டு பெண் தேவதைகளைக் குழந்தையாயும் பெற்றிருக்கிறீர்கள். அவர்களுக்கு உன்னதமான கல்வி அளிக்க வேண்டுமல்லவா? தலை சிறந்த முதல் நிலை அதிகாரிகளாக அவர்கள் ஆனால் எவ்வளவு நன்றாயிருக்கும்?

வெளிநாட்டில் படித்துப் பணிபுரிந்தால் எப்படியிருக்கும்? அதற்காக உழையுங்கள்.

வலைப் பூக்களில் அவ்வப்போது எழுதுங்கள். அதிகமா எழுதுபவர்களைச் சில வகைகளில் எளிதாகப் பிரிக்கலாம்.

வேறு எந்தப் பொழுதுபோக்கும் இல்லாதவர்கள்.. .. .. ஒரு கம்பியூட்டர் கிடைத்து நெட் இணைப்பும் கிடைத்ததால் சர்வ சதா காலமும் எதையாவது பினாத்திக் கொண்டிருப்பவர்கள்.

எழுதுவதைத் தவிர வேறு வேலை இல்லாதவர்கள். எதையாவது எழுதாவிட்டால் … (சரி வேண்டாம்.)

இன்னும் சிலர் கம்ப்யூட்டர் முன்னேயே பணிபுரிபவர்கள்.. … இவர்களுக்கு கம்ப்யூட்டர் திரை ஒரு வரமாக இருந்து கொஞ்ச காலத்துக்குப் பின் சாபமாக மாறியிருக்கும். அவர்கள் தங்களின் சுயத்தை முழுதும் இழந்துவிடாதிருக்க என்னேரமும் எதையாவது எழுதுபவர்கள்.

இன்னும் சிலர் பலவித மன நெகிழ்வுகளுக்கு ஆளானவர்கள். தங்களை மற்றவர்கள் விமர்சிக்க வேண்டும் என விரும்புவார்கள். ஏன் தங்களை மற்றவர்கள் திட்ட வேண்டும் எனவும் விரும்புபவர்கள்.

இன்னும் சிலர் எலக்ட்ரானிக் எழுத்து வியாபாரிகள்.

இன்னும் சிலர் வீட்டில் ஹோம் பேர்டாக இருப்பார்கள். கோலம் போடுவது எப்படி கொத்து புரோட்டா போடுவது எப்படி .. இது மாதிரி.

இன்னும் சிலர் என்னை மாதிரி. பரபரப்பில்லாமல் ஓய்வு நேரம் கிடைக்கும்போது எழுத்துலக அவதாரம். When time warrants we wear an entirely different mask. இது ஒரு விளையாட்டு மாதிரி. வேடிக்கை பார்க்கிற feeling! எழுத்தைவிட எழுதுபவர்களை அவதானிப்பவர்கள்.

கயல்விழி போன்றோர் மாதிரி அளவாக, செறிவாக வாரம் ஒரு முறை அல்லது இருவாரத்துக்கொரு முறை எழுதுங்கள்.

Kindly be a balanced man. Don’t get excited!

எல்லாருக்குமே தான் கவனிக்கப் படவேண்டுமென்ற உந்துதல் இருக்கும்.

குழந்தைகள் தேவையில்லாமல் அழுவதும் குமரிகள் அங்கங்கள் பிதுங்க ஆடை அணிவதும் தொப்புள் தெரியச் சேலை கட்டுவதும் எதற்காக என்று நினக்கிறீர்கள்? Exhibitionism என்கிற ஒருவிதமான phobiaவின் லேசான வெளிப்படுதான் இவை.

தாமஸ் ஹார்டி சொன்னது போல “far from the madding crowd” ஆக இருக்க வேண்டாமா நீங்கள்?

ஒரு முறை தமிழய்யா அப்பநாய்க்கம்பாளையம் அரங்க. முத்துச்சாமியிடம் கேட்டேன்.

“ஐயா! தமிழிலும் ஆங்கிலத்திலேயும் இவ்வளவு கவர்ச்சியாய்ப் பேசுகிறீர்கள். எழுதுகிறீர்கள்.. நீங்கள் ஏன் ஒரு வலைப்பூ ஆரம்பித்து அதில் எழுதக்கூடாது?”

“அதிகம் பணிச் சுமை இல்லாத சிகையலங்கார நிபுணன் தனது இல்லக் கிழத்திக்குத் தேவையில்லாத அணி செய்தமையை ஞான் செய்ய விரும்பவில்லை” என்றார்.

கடும் சினம் வந்தது எனக்கு. முதல் முறையாகக் கடுமையான வார்த்தைகளால் அவரைக் கடிந்துவிட்டுக் குவளையைப் பாதியிலேயே வைத்துவிட்டு எழுந்து வந்துவிட்டேன். அன்றிலிருந்து 4 நட்களாய் அவருடன் பேசுவதைத் தவிர்த்தும் விட்டேன்.

பரிசல்காரன்! மீண்டும் சொல்கிறேன். வலைப் பதிவு போதையிலிருந்து உடனடியாக மீளுங்கள். நல்ல நண்பர்கள் கிடைத்திருப்பதைத் தவிர உருப்படியான முன்னேற்றத்துக்குக் கிஞ்சித்தும் வழிகாட்டாத உலகம் வலைப் பூ உலகம்!

­­­­____________________________________________

61 comments:

Indian said...

//“அதிகம் பணிச் சுமை இல்லாத சிகையலங்கார நிபுணன் தனது இல்லக் கிழத்திக்குத் தேவையில்லாத அணி செய்தமையை ஞான் செய்ய விரும்பவில்லை” என்றார்.//

:) :) :) LOL

வால்பையன் said...

எனக்கும் இதே போல் ஆரம்பத்தில் இருந்தது.
என்னை நானே கட்டுபடுத்தி கொண்டேன்.
மாதத்திற்கு நான்கு அல்லது ஐந்து பதிவுகளே.
உங்கள் அறிவுரையும் ஏற்றுக்கொள்ள பட்டது

வால்பையன்

கிரி said...

மொத்த பதிவிற்கும் ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

லதானந்த் சார் கலக்கி விட்டீர்கள்..இது பரிசல் காரருக்கு மட்டும் அல்ல பலருக்கும் பொருந்தும், எனக்கும் இந்த எண்ணம் அடிக்கடி வருவதுண்டு. இதை பற்றி எழுத வேண்டும் என்று அடிக்கடி நினைத்ததுண்டு.

வாழ்த்துக்கள் அருமையான பதிவு.

பரிசல்காரன் said...

அங்கிள்

மீ த ஃபர்ஸ்ட்!

(அட.. இதுக்குமாடா? நீ திருந்தவே மாட்டியா? என்று திட்டுவது கேக்குது!!)

பரிசல்காரன் said...

ஐயா..

ஒவ்வொரு உண்மையும் அறைகிறது!

ஆனால்... என்ன சொல்வதென்ற்ய் தெரியவில்லை...

விளக்கமாய் உங்களுக்கு பதிவிலேயே கடிதம் எழுதுகிறேன்!

(ஆஹா.. இத வெச்சும் பதிவு போடப் போறானே.. இவன் திருந்தறதுக்கு வாய்ப்பே இல்லை!)

பரிசல்காரன் said...

எழுதுவதை நிறுத்திவிடலாமா என்று தீவிரமாக (சீரியஸாக) யோசிக்கிறேன்!

☼ வெயிலான் said...

மிக ஆழமான அவதானிப்புக்கு பின் ஆணித்தரமான கருத்துக்களுடனான அலசல்.

பரிசலை கிழிச்சு தொங்க விட்டுட்டீங்க.

உங்களைப் போன்று மூன்றாம் மனிதன் இடத்தில் நின்று பார்த்து சொல்லி திருத்துபவர்கள் மிகக்குறைவு.

தங்களின் கனிவுக்கும், கருத்துக்கும் ராயல் சல்யூட்!

பரிசல்காரன் said...

பதிவு போட்டுவிட்டேன்!

இனி அதிகமாய் எழுதுவதில்லை என்று..

பரிசல்காரன் said...

பதிவு போட்டுவிட்டேன் அங்கிள்..

”விடைபெறுகிறேன்.. எல்லோருக்கும் நன்றி!”

Athisha said...

அண்ணா ,

நிச்சயமாக இக்கடிதம் பரிசல்காரனுக்கு மட்டுமல்ல என்னைப் போல வலைபித்தில் அலைகின்ற பலருக்குமான ஒரு கடிதமாகவே பார்க்கிறேன் .

நீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்துக்குமே என் பதில் ஆம்தான் ,

பொட்டில் அடித்தது போல் அனுபவமிக்க உங்களைத்தவிர வேறு யாரும் இவ்விசயத்தை அணுகியிருக்க முடியாது ( உங்கள் அனுபவம் அப்படி )

நிச்சயமாக இப்பதிவு என்னுள் பல மாற்றங்களை நிகழ்த்தும் .

Unknown said...

//நல்ல நண்பர்கள் கிடைத்திருப்பதைத் தவிர உருப்படியான முன்னேற்றத்துக்குக் கிஞ்சித்தும் வழிகாட்டாத உலகம் வலைப் பூ உலகம்!\\
நூற்றுக்நூறு உண்மை. இருந்தாலும் உங்களைப் போன்றவர்களை எல்லாம் வலைப்பூ மூலமாகத்தானே அறிந்து கொண்டோம். மனிதர்களுக்கு ஏதோ ஒரு போதை எப்போதும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
அன்புடன்
சந்துரு

ராஜ நடராஜன் said...

அய்யய்யோ!பரிசல்காரன்கிட்ட போயிட்டு இங்கே வந்தா இந்த மாதிரியும் பார்வைகள் இருக்கிறதா?அப்ப பரிசல்காரன்கிட்ட மீண்டும் ஒரு முறை சொல்லிவிட்டு வருகிறேன்.

(இந்தப் பின்னூட்டம் பதிவாகுமான்னு சந்தேகத்துடனே....காரணம் உங்களுக்கு அனுப்பும் பின்னூட்டம் குட்டிக்கரணம் அடிச்சு திரும்ப என்னிடமே வந்து விடுவதால்.)

நிஜமா நல்லவன் said...

//நல்ல நண்பர்கள் கிடைத்திருப்பதைத் தவிர உருப்படியான முன்னேற்றத்துக்குக் கிஞ்சித்தும் வழிகாட்டாத உலகம் வலைப் பூ உலகம்!//

வழி மொழிகிறேன்!

புருனோ Bruno said...

ஒரு (ஒரே ஒரு) வரி குறித்து எனக்கு உடன்பாடு இல்லை.

//வெளிநாட்டில் படித்துப் பணிபுரிந்தால் எப்படியிருக்கும்? அதற்காக உழையுங்கள்.//


ஏன் சாரே, இந்தியாவில் படித்து இந்தியாவில் பணிபுரிந்தால் என்ன குறைச்சல்

Thamira said...

லதானந்த், எளிமையான தெளிவான அறிவுரை.! அவ்வளவு மோசமில்லை என்றாலும் ( நான் பரிசலை சொல்லவில்லை, கட்டுரையில் கூறப்பட்டதை கூறுகிறேன்) சரியான நேரத்தில் கிடைத்த எனக்கான அறிவுரையாகவும் கொள்கிறேன். நன்றி.!

கூடுதுறை said...

லதானந்த் அவர்களுக்கு....

உங்களின் கடிதம் பதிவுபோதையில் இருக்கும் பலரின் கண்களை திறக்கும் நான் உள்பட...

நன்றி

Saminathan said...

நல்ல அட்வைஸ். எனக்கும் கூட...
நன்றி !

Mahesh said...

என் பின்னூட்டத்தை ஒரு பதிவாகவே போட்டு விட்டேன்.

http://thuklak.blogspot.com/2008/08/blog-post_11.html

சின்னப் பையன் said...

மொத்த பதிவும் சூப்பர். பரிசலுக்கு மட்டுமில்லாமல், எல்லோரும் இந்த பதிவை நகலெடுத்து தங்கள் கணிணிக்குப் பக்கத்தில் ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டும்...

லதானந்த் said...

உடனடி எதிர்வினை!
கயல்!
கீழ்க் கண்ட காமென் டுக்கு நீ பதில் சொல்!
//////ஒரு (ஒரே ஒரு) வரி குறித்து எனக்கு உடன்பாடு இல்லை.//////

//வெளிநாட்டில் படித்துப் பணிபுரிந்தால் எப்படியிருக்கும்? அதற்காக உழையுங்கள்.//


ஏன் சாரே, இந்தியாவில் படித்து இந்தியாவில் பணிபுரிந்தால் என்ன குறைச்சல்

விஜய்கோபால்சாமி said...

தங்களது கேள்வி வரிசையில் ஒரு சிலவற்றுக்கு ஆம் என்று தான் சொல்ல வேண்டியிருந்தது. முடிந்த வரை திருத்திக் கொள்கிறேன். ஏண்டா அந்த சனியன் (கம்ப்யூட்டர்) முன்னாடியே உக்காந்திருக்கேன்னு என்னைப் பாத்து என் வருங்காலம் (திருமதி) கேக்கறதுக்கு முன்னாடி சரியான நேரத்தில சொல்லிருக்கீங்க. மிக்க நன்றி.

வெண்பூ said...

நெத்தியடி.. உண்மையை சொல்லப்போனால் நேற்று பதிவர் சந்திப்பில் ஒரு பதிவர் என்னிடம் கேட்டார், பரிசல் ரொம்ப ஆர்வமா இருக்காரே?? என்று..

ஆனால் இந்த பதிவும் நான் முதலில் சொன்ன நெத்தியடியும் அவருக்கு மட்டுமல்ல.. எல்லோருக்கும்தான். நான் உட்பட.

Vijay said...

பரிசல்காரன் வலைப்பக்கத்திலிருந்து உங்கள் பக்கத்திற்கு வந்தேன். உங்களது அறிவுரை எனக்கும்தான் என்று தோன்றுகிறது. நான், தினம் ஒரு பதிவு எழுதாவிட்டாலும், அடுத்து என்ன எழுத என்று தான் மனம் யோசித்துக்கொண்டே இருக்கிறது. போதாக்குறைக்கு இன்னொரு பிளாகும் ஆரம்பித்திருக்கிறேன். ஆங்கிலத்தில் எழுத. உங்களது அறிவுரையை ஏற்று இனி நானும் இந்த வலைப்பூ என்னும் போதையிலிருந்து கொஞ்சம் விடுபட முயற்சிக்கிறேன்.

நன்றி
விஜய்

குசும்பன் said...

அருமை எல்லா கேள்விகளுக்கும் ஆம் தான் என் பதில். இனி குறைச்சுக்கிறேன்.

புகழன் said...

அழகிய அறிவுரைக் கடிதம் இது.
இது பரிசல்காரனுக்கு மட்டுமல்ல எல்லா பதிவர்களுக்கும்தான்.

ALIF AHAMED said...

நாங்க எல்லாம் அப்பவே இதை பத்தி யோசிச்சு விடை பெற்று மிண்டு(ம்) வந்து மறுபடியும் விடைபெற்று மறுபடியும் வந்து.....


இப்ப.... வேடிக்கை மட்டும் பார்த்துகிட்டு இருக்கேன்

என் உள்ள குமறலும் நன்றி பதிவரே..

யாரோடையும் டச் இல்லாமல்.....


(நண்பர்கள் மன்னிக்க இதே காரணத்தினால் தான் தங்களை தொடர்பு கொள்ள வில்லை)

Indian said...

இந்த அறிவுரை பின்னூட்டமிடுபவர்களுக்கும் பொருந்தும்.

ஜோசப் பால்ராஜ் said...

மிக அதீத அக்கறையின் வெளிப்பாடாக இக் கடிதத்தை எடுத்துக்கொள்ளவேண்டும். மாமா, உங்கள் அன்பும், அக்கறையும் பளிச்சென வெளிப்படும் இக்கடிதம் உண்மையிலேயே உங்கள் அனுபவத்தை காட்டுகிறது.

நானும் சென்றமாதம் எனது அலுவலகத்தில் இருக்கும் போது அடுத்து என்ன பதிவு எழுதுவது என்றெல்லாம் நினைத்தேன். ஆனால் தற்போது அப்படியில்லை. ஏனென்றால் எனது பணி வேகம் குறைவது எனக்கே நன்றாக தெரிந்தது. ஆனாலும் இந்த கடிதத்தை எனக்கும் உங்கள் அறிவுரையாக எடுத்துக்கொள்கிறேன்.

நன்றி மாமா.

Sanjai Gandhi said...

அருமையான பதிவு.. வரவேற்கிறேன். லதானந்த் சார்.. உங்க அனுபவத்திர்கும் அறிவிற்கும் முன் நான் நத்திங். ஆனாலும் சில தாழ்மையான கருத்துக்கள்.

இந்த பதிவை பொதுவான பதிவாக போட்டிருக்கலாம். ஏனென்றால் இது பெரும்பாலானோருக்கு பொருந்தும்.. அதை விடுத்து பரிசலாரை குறிபிட்டு போட்டது கொஞ்சம் நெருடலாய் இருக்கு. இதற்கு அவ்ரின் சமீபத்திய பதிவே சாட்சி. மொத்தமாக விடை பெறுகிறேன் என்று சொல்லிவிட்டார்.

நீங்கள் அவர் பெயரை குறிப்பிட்டு பதிவிட்டிருப்பதால் , எதோ அவர் மட்டுமே இப்படி இருப்பதாக நினைக்கத் தூண்டி இருக்கலாம்.. அந்த வலி தான் அவரை மொத்தமாக பதிவுலகம் விட்டு போக வைத்திருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது.

( அவர் பதிவில் : "மிகுந்த மனவேதனையுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன். உண்மை சுடும்!")

இதை பொதுவான பதிவாக போட்டு தனி மடலில் அவருக்கு தெரிய படுத்தி இருக்கலாம். அவரிடம் நெருங்கி பழகும் உங்களுக்கு அவர் சுபாவம் நன்றாகத் தெரிந்திருக்கும். அவர் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர். அதனால் தான் விடைபெருகிறேன் என்று அறிவித்திருக்கிறார்.

தயவு செய்து அவரிடம் இருக்கும் நகைச்சுவையான கற்பனை திறமையை யாரும் சாகடித்து விடாதிர்கள். தக்க அறிவுரை வழங்கி அவ்வப்போதாவது அவரை எழுத வையுங்கள்...

(..அதிக பிரசங்கியாய் பேசி இருந்தால் மன்னிக்கவும்..)

மொக்கைச்சாமி said...

// இந்தியாவில் படித்து இந்தியாவில் பணிபுரிந்தால் என்ன குறைச்சல் //

1) முக்கியமாக வேலை செய்யும் இடத்தில் "professionalism". இந்திய IT கம்பனிகளில் சில காலம் பணிபுரிந்து பின்பு வெளி நாடுகளில் பணி புரியும் போது இதை கண் கூடாக பார்க்கலாம்.

2) வாழ்க்கைத்தரம். படிக்கும் காலத்திலேயே வெளி நாடு வந்துவிட்டால் இதை உணர்வது கொஞ்சம் கடினம். ஆனால் கொஞ்ச காலம் நம்மூரில் வாழ்ந்து பின்னர் இங்கே வந்தால் you can see a visible difference on living conditions.

3) வெளி நாடுகள் போகும் பல பேர் இந்தியா திரும்பி வர விரும்பாததற்கு மேலே உள்ளவையே காரணமே தவிர அனேகையர் நினைப்பது போல் பணம் அல்ல.

[ இதைபத்தி தனி பதிவே போடலாம். கயல் கேள்விக்கு பதிலளித்ததற்கு மன்னிக்கவேண்டும் ]

நாமக்கல் சிபி said...

//தயவு செய்து அவரிடம் இருக்கும் நகைச்சுவையான கற்பனை திறமையை யாரும் சாகடித்து விடாதிர்கள். தக்க அறிவுரை வழங்கி அவ்வப்போதாவது அவரை எழுத வையுங்கள்...
//

ரிப்பீட்டேய்!

யட்சன்... said...

இப்படியொரு பதிவினையிட்டதன் மூலம் உங்களுக்கு "வலையுலகின் ஸ்பீட்ப்ரேக்கர்" என்கிற பட்டத்தினை வழங்குகிறேன்...

அடையாளங்களையோ, அங்கீகாரங்களையோ விரும்பாத, எதிர்பார்க்காத ஒரு சீனியர் பதிவர் என்கிற வகையில் இந்த பட்டத்தினை வழங்கிட எனக்கு தகுதியிருப்பதாகவே நினைக்கிறேன்.

பரிசல்காரன் said...

இப்பவரைக்கும்...

எனக்கு 24 கமெண்ட்..

உங்களுக்கு 31 கமெண்ட்!!

ஜெயிச்சுட்டீங்க அங்கிள்! (இ.ஆ.பா.கு?)


என்னோட பதிவு தலைப்பை மாத்தீட்டேன்.. ஏன்னா, பதிவைப் போட்டுட்டு கூப்ட்ட நீங்க என்னோட எஸ்.எம்.எஸ்ஸைப் பாத்துட்டு கூப்பிடல. “டேய்.. அப்ப்டி ஏண்டா ராஸ்கல் எழுதின”ன்னு திட்டீருந்தாகூட சந்தோஷப்பட்டிருப்பேன். கூப்பிடாமலே என்னை உணரவெச்சுட்டீங்க”ன்னு நெனைக்கறேன்.

கலைஞர்களுக்கு (கருணாநிதி அல்ல) உணர்ச்சிவசப்படல் சகஜம் என்பார்கள்.

இப்போ தலைப்பை மாத்தி போட்டுட்டேன். ஒக்கேவா?

நான் உங்களைத் தப்பா எடுத்துகிட்டதா, தப்பா எடுத்துகிட்டிருந்தீங்கன்னா, தப்பா எடுத்துக்காம, தப்பா எடுத்துகிட்டத மனசுலேர்ந்து சரியா எடுத்துடுங்க.

அப்பப்ப சந்திக்கறேன். அல்லது எப்போதாவது சந்திக்கறேன்!

MSK / Saravana said...

நல்ல அட்வைஸ். எனக்கும் கூட...
நன்றி !

Sundar சுந்தர் said...

நீங்கள் சொல்லியிருப்பது ரொம்ப சரி. பரிசில்காரன் மட்டுமில்லாமல், எல்லோருக்குமே சொல்ல வேண்டிய கருத்தும் கூட. அவர் பெயர் போட்டு சொன்னதால், தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டு கஷ்டப்படுவது போல தோன்றுகிறது. நேரிலோ, அலைப்பேசி மூலமோ, நிச்சயம் சமாதானம் பண்ணி இருப்பிர்கள் என்று நினைக்கிறேன்.

புதிதாய் பதிவு படிக்க ஆரம்பித்தவன் என்ற முறையில், இது எவ்வளவு addictive என்று எனக்கு உடனே புரிந்து விட்டது. என் குடும்பம் விடுமுறைக்கு வெளியூர் போனதால் டிவி க்கு பதில் இது என்று தான் நினைத்துக்கொண்டேன்.

பணி நிமிர்த்தமாக பல ஆண்டுகளாக தமிழுடனும், தமிழ் பேசும் பல தரப்பட்ட மக்களுடனும் தொடர்பு குறைந்து போன எனக்கு வலைப்பூக்களும், நீங்கள், பரிசில்காரன் போன்றோரோட எழுத்துகளும், ரொம்பவும் திருப்தி ஆக இருக்கிறது. அவரை மீண்டும் எழுத வைப்பது உங்கள் பொறுப்பு.

கயல்விழி said...

லதானந்த் சித்தரிடம் இருந்து இப்படி ஒரு பதிவை எதிர்பார்க்கவில்லை.

இந்த அறிவுறை அனைவருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன், பரிசலுக்கு மட்டுமல்ல. முக்கியமாக எனக்கு பொருந்தும்!

வலைப்பூ அடிக்ஷன் எனக்கும் இருக்கிறது என்று நினைக்கிறேன். சிகரெட், ஆல்கஹால், ட்ரக்ஸ் எப்படி எல்லாம் நம்மை கட்டுப்படுத்துமோ, இணையதளமும் அப்படியே. பரிசல் இந்த அறிவுரைகளை எப்படி எடுத்துக்கொண்டார் என்று தெரியவில்லை(இன்னும் அவர் வலைப்பூ படிக்கவில்லை). நான் பாசிடிவாகவே எடுத்துக்கொள்கிறேன்.

கயல்விழி said...

//கயல்!
கீழ்க் கண்ட காமென் டுக்கு நீ பதில் சொல்!
//

மொக்கைச்சாமி எழுதிய காரணங்கள் தவிர்த்து:

1. வேலை பளு இந்தியாவை விட ஒப்பிட்டால் ரொம்ப குறைவு.

2. Job security அதிகம். இந்தியாவிலேயே படித்து வேலை செய்யும் என்னுடைய பழைய ஃப்ரெண்ட்ஸுக்கு இருப்பதை விட அதிகம்.

3. வாழ்க்கைத்தரம்: போக்குவரத்து நெரிச்சல், ஜன நெரிச்சல், சுத்தம், கல்வி - இதையெல்லாம் குறிப்பிட்டு சொல்லலாம்.

இதை எல்லாம் எழுதுவதால் உடனே என்னை சுயநலவாதி என்று பலர் நினைக்கலாம். உலகில் அனைவருமே ஏதோ ஒரு வகையில் சுயநலவாதிகளே! ஒப்புக்கொள்ள என்ன தயக்கம்? வாய்ப்பு இருந்து வெளிநாடு போகாதவர்கள் ரொம்ப குறைவு.

கயல்விழி said...

திருமணமானவர்கள் மற்றும் குழந்தைகள் போன்ற பெரிய பொறுப்புகள் இருப்பவர்கள், எங்களை போன்ற பொறுப்பில்லாதவர்களை விட அதிக கவனமாக இருக்க வேண்டும் என்பது உண்மை.

Selva Kumar said...

அங்க்கிள்..

பதிவு எழுத தொடங்கிய முதல் ஒரு மாதம் நானும் இது போல உணர்ந்தேன்.

ஆனால் போகப்போக It's just Recreative not Remunerative என்பதை புரிந்து கொண்டேன். அதனால் சினிமா பார்ப்பது தேவையில்லாமல் ஊர் சுற்றுவது போன்ற நேரங்களை "மட்டும்" பதிவெழுத மாற்றிக் கொண்டேன்.

அலுவலகம் சென்றால் பதிவுலகத்தையே மறந்து விடுவேன்.

ஆனால் என்னைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளை பற்றி "பதிவெழுத" முடியுமா என்று அவ்வப்போது நினைப்பதுண்டு.


மற்றபடி பதிவெழுத ஆரம்பித்த இந்த இரண்டு மாதத்தில்தான் நான் தமிழில் எழுத பழகுகிறேன்.

அதற்கு முன்னர் ஒரு பாடமாக படித்து (மனப்பாடம் செய்து) எழுதி வந்ததால் இது ஒரு புதிய அனுபவமாக தெரிகிறது.

Selva Kumar said...

அங்க்கிள்..

நான் பரிசல் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் அவர் பதிவை அதிகமாக படித்ததில்லை. அவரைப்பற்றி எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது.

ஆனால் உங்களைப்பற்றி எனக்கு தெரியும் அதனால் இந்த பதிவின் நோக்கத்தை நான் பாராட்டுகிறேன்.

இதுவே இரண்டு பேரையும் பற்றி தெரியாதவர்கள் படித்தால் என்ன நினைப்பார்கள்? சரியாக எடுத்துக்கொள்வார்களா ? எனக்கு தெரியவில்லை.

இதையெல்லாம் நீங்கள் கட்டாயம் யோசித்திருப்பீர்கள் என்று நானறிவேன்.

"பரிசல்" எழுதாமல் விட்டால் அதற்கு நீங்கள்தான் காரணம் என்ற ரீதியில் சிலர் பேசுவது எனக்கு பிடிக்கவில்லை.


அதனால் இந்த பதிவை பொதுவாக எழுதிவிட்டு "உன்னை பத்திதான் எழுதினேன்" என்று அவருக்கு தனியாக சொல்லியிருந்தால் மற்றவர்கள் உங்கள் இருவரைப் பற்றியும் தவறாக எண்ண மாட்டார்கள் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

சீமாச்சு.. said...

நல்லா இருந்திச்சி.. இது எல்லோருக்கும் பொருந்தும். தக்க சமயத்தில் வந்த சிறந்த கடிதம்..

இதை அடிக்கடி (3 மாத இடைவெளிகளில்) மறு பதிப்பு செய்யவும்..

சீமாச்சு

Nilofer Anbarasu said...

சொல்ல வந்தத ரொம்ப அழகா தெளிவா சொல்லியிருக்கீங்க.... இது பரிசல்காரருக்கு மட்டும் அல்ல பலருக்கும் தான், நான் உட்பட. சமீப காலத்தில் பலரும் பலருக்கு கடிதம் எழுதுகீறார்கள், அதில் உருப்படியான கடிதம் இதுதான்...வலைப்பூவில் சிறந்த இடுக்கைகள் என பின்னாளில் யாரேனும் சேகரித்தால் நிச்சயம் இந்த இடுக்கையும் அதில் இடம்பெறும். இடம்பெறவேண்டும்.

புதுகை.அப்துல்லா said...

பரிசலின் பதிவில் இட்ட பின்னூட்டத்தை இங்கும் இடுகிறேன் லதானந்த் மாமா அவர்களின் கவனத்திற்காக :

பரிசல் நேற்று நான் இந்தப் பக்கம் வராததால் எனக்கு இந்த விவாதம் தெரியாமல் போய்விட்டது.லதானந்த் மாமா சொல்வது அனைவருக்கும் பொருந்தும்.உதாரணத்திற்கு உங்க பேரைச் சொல்லீருக்கிறார்.அவ்வளவுதான். உங்களிடம் ஓருமுறை நாம் பேசும் போது லாதானந்த் மாமா பற்றி பேச்சு வந்த போது
கூட சொன்னேன்,நான் பெரும்பாலானவர்களின் பதிவுகளைப் படித்து விடுவேன்...ஆனால் அனைவருக்கும் பின்னூட்டம் இடமாட்டேன். காரணம் நேரத்தை விழுங்கிவிடும். ஓரு சிறு குழு ஓன்றை தேர்ந்தெடுத்து அவர்களின் பதிவுகளுக்கு மட்டுமே பின்னூட்டம் இடுகிறேன்.லதானந்த் மாமா வலைப்பூ மிகச் சிறப்பாக இருந்தாலும் அந்தக் குழுவில் அவரை நான் இணைக்காததால் அவருக்கு பின்னூட்டம் இடுவதில்லை படிப்பதோடு சரி என்றேன். நான் உணர்ந்தவரை நான் சொன்னதைத்தான் அவர் வேறு வடிவத்தில் சொல்லி இருக்கிறார். நம்முடைய பொழப்பைப் பார்க்கவும் குடும்பத்தைப் பார்க்கவும் நேரம் முக்கியம் இல்லையா பரிசல்?அதைத் தானே அவர் சொல்கிறார். அதற்காக ஓரேடியா எழுத மாட்டேன்னா இன்னாயா அர்த்தம்? அப்பப்ப எழுதுங்க. ஓரு குழுவாக தேர்ந்தெடுத்து இயங்குங்க.நேரம் தன்னால கிடைக்கும். வாங்கண்ணே மீண்டு(ம்)!

cheena (சீனா) said...

அன்பின் லதானந்த்

உடன்படுகிறேன் கருத்தினிற்கு

சிந்தனையைத் தூண்டும் பதிவு

சிந்திப்போம்

மாறுவோம்

pudugaithendral said...

அழகிய அறிவுரைக் கடிதம் இது.
இது பரிசல்காரனுக்கு மட்டுமல்ல எல்லா பதிவர்களுக்கும்தான்.

வழி மொழிகிறேன்.

மனம் நிறைந்த வாழ்த்துக்களுடன்
புதுகைத் தென்றல்

Robin said...

நீங்கள் எழுதிய கருத்துக்களை எல்லா வலைப்பதிவர்களும் சிந்திக்கவேண்டும் என்று விரும்புகிறேன். பெரும்பாலானவர்கள் ஏதாவது ஒரு பதிவு தினமும் எழுதிவிட வேண்டும் என்று நினைத்து உளறிக்கொட்டிவிடுகிறார்கள். சொல்லப்போனால் பெரும்பாலானத் த்மிழ் பதிவுகள் வெறும் குப்பைகளாகவே தோற்றமளிக்கின்றன. எண்ணிக்கையை விட தரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாரத்திற்கு ஒரு பதிவு போட்டால் கூட வாசகர்களுக்கும் எழுதுபவர்களுக்கும் கூட பயன் உள்ளதாக இருக்கும். இல்லையென்றால் விலைமதிப்பில்லாத நேரத்தை வீணடித்தவர்களாவோம்.

சரவணகுமரன் said...

பல பேரை யோசிக்க வைத்துவிட்டீர்கள்... அக்கறையுடன் கூறிய உங்க அறிவுரைக்கு மிக்க நன்றி....

Anonymous said...

பரிசல்
மழித்தலும் நீட்டலும் வேண்டா

லதானந்த்
கடிதோச்சி மெல்ல எறிக

லக்கிலுக் said...

////நல்ல நண்பர்கள் கிடைத்திருப்பதைத் தவிர உருப்படியான முன்னேற்றத்துக்குக் கிஞ்சித்தும் வழிகாட்டாத உலகம் வலைப் பூ உலகம்!////

பொதுவாக ஒட்டுமொத்தமாக உங்கள் கடிதத்தை ஏற்றுக் கொண்டாலும் இதுபோல சில கருத்துக்களை கடுமையாக எதிர்க்க வேண்டிய நிலையில் இருக்கிறேன்.

வலைப்பதிவுலகம் மூலமாக முன்னேறிய பலரும் உண்டு. நானும் நிறைய ஆதாயங்கள் அடைந்திருக்கிறேன். ஆங்கிலத்தில் வலைப்பதியும் ஒரு நண்பருக்கு வாழ்க்கைத்துணையே வலைப்பதிவு மூலமாகவும் கிடைத்திருக்கிறது.

வலைப்பதிவு ஒரு அரிவாள் மாதிரி. அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் தான் நமது சாமர்த்தியம் இருக்கிறது. அரிவாளால் கதிரறுக்கவும் முடியும், கழுத்தை அறுக்கவும் முடியும்.

அன்புடன்
லக்கி

மதுரை சொக்கன் said...

//இந்த வலைப் பதிவுலகு என்பதும் ஒரு வகையான போதை போன்றதே//
சரியாகச் சொன்னீர்கள்.இது பரிசல்காரருக்கு மட்டுமன்று. எல்லோரும்,குறிப்பாகப் புதிய பதிவர்கள் ,கவனத்தில் கொள்ள வேண்டிய அறிவுரை.
நன்றி.

Anonymous said...

நிறைய பேருக்கு தமிழ்மணம் ஒரு நாள் பாக்கலீன்னா பைத்தியமே பிடிச்சுரும். பதிவு போடறது மட்டுமில்லா. படிக்கறவங்கள்லயுமு இந்த மாதிரி எக்ஸ்டிரீம் உண்டு. எல்லாருக்கும் நல்ல அட்வைஸ் குடுத்திருக்கீங்க

Anonymous said...

இதுவரைக்கும் ஆசிரமத்தில இருந்து வந்த அருளுரைகள்லயே இதுதான் சூப்பரு!!:)

மங்களூர் சிவா said...

Attendance

VIKNESHWARAN ADAKKALAM said...

//ஊடகங்களுக்குத் தொடர்ந்து அனுப்புங்கள்.//

பதிவுகளில் பதிப்பித்தால் என்ன வந்தது? பதிவெழுதுவது நண்பர்களை மட்டும்தான் தேடித் தருமா? ஏன் பல விடங்களை அறிந்துக் கொள்ளும் தளமாக பதிவுலகம் இல்லையா? கருத்துப் பரிமாற்றங்கள், சிந்தனைகளை தூண்டும் வகையில் பதிவுலகம் இல்லையா? என்னைப் போன்ற தமிழறியாதவர்கள் தமிழ் வளர்த்துக் கொள்ள பதிவுலகம் உதவவில்லையா?

லதானந்த் said...

உடனடி எதிர்வினை!

பரிசல்காரன்!
இதற்காக ஆசைப்படவில்லை கிருஷ்ணகுமாரா!

விக்னேஷ்வரன்!

பரிசல்காரனின் ஓய்வு நேரத்தில் ஊடகங்களுக்கு எழுதச்சொன்னேன்.
சதா சர்வகாலமும் உங்களுக்குக் கிச்சுக் கிச்சு மூடவும் தமிழ்ப் பாடம் சொல்லிகொடுக்கவும்
பரிசல்காரனின் பொன்னான நேரத்தை உறிஞ்சாதீர்கள்!
அவரின் முன்னேற்றத்துக்கு 100% இப்போதுள்ள அவரது வேகம் தடையாய் இருக்கும்!

Remember Cahrity starts from home!

லதானந்த் said...

12.08.2008 இந்திய நேரம் பகல் 12 மணியிலிருந்து மாலை 6 மணிவரை பின்னூட்டம் இட்ட 6 கமென்டுகளை பப்ளிஷ் பண்ணுவதற்குப் பதிலாக ரிஜக்ட் பட்டனை அழுத்தி அழித்து விட்டேன். கனிவு கூர்ந்து சிரமம் பாராது மீண்டும் அதே பின்னூட்டத்தை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.

Ramesh said...

If you know emails of those bloggers, if the mail from blogger.com is sitting in your inbox, please forward to them.

Or ask for the names who put comments to send your email address to make them put again.

Thanks.

Vinitha said...

It was a good post sir. Tamil typing takes time. Sorry.

மெளலி (மதுரையம்பதி) said...

லதானந்த் சார்....

பரிசில்காரர் பதிவினை பார்த்துவிட்டு இங்கு வந்தேன்...உங்கள் இருவர் பதிவுகளும் நான் படித்ததில்லை...ஆனா உங்களது இந்த பதிவு 99% உண்மை...நானும் ஏற்கிறேன்...சிந்தனையை தூண்டும் பதிவு...நன்றி.

முகவை மைந்தன் said...

நல்லாச் சொன்னீங்க. ஆனா, பொதுவா எழுதிட்டு, பரிசலுக்கு தனிப்பட்டு சொல்லி இருக்கலாம். (இதுக்கெல்லாம் மான இழப்பு வழக்குப் போட முடியுமான்னு தெரியலை.;-) இல்லாங்காட்டி இவ்வளவு பேர் கவனத்துக்குப் போயிருக்குமா? பேரைச் சொல்லி போட்டாத் தான் படிப்பேன்றது நம்ம கிட்ட இருக்க அழுக்குகள்ல ஒண்ணு.

பதிவின் பொருளுக்குள்ள வர்றேன்.
//நல்ல நண்பர்கள் கிடைத்திருப்பதைத் தவிர உருப்படியான முன்னேற்றத்துக்குக் கிஞ்சித்தும் வழிகாட்டாத உலகம் வலைப் பூ உலகம்!//

அய்யா, நல்ல நண்பர்களை விட வேறென்ன வேண்டும் உங்களுக்கு? நல்ல நண்பர்கள் நீங்கள் அடையக் கூடிய அனைத்து பயன்களுக்கும் ஆதாரம். லக்கி, தன்னுடைய ஆதாயங்களை விவரித்தால் அனைத்தும் வலை நண்பர்களை மூலமாகக் கொண்டவை என்று உறுதியாகச் சொல்வேன்.

மற்ற அனைத்துக் கருத்துக்களுக்கும் ஓ மட்டும் போடுகிறேன்.

1. நான் இடுகைகள் இடுவது அரிது. (வெக்கமாத் தான் இருக்கு, நாலைஞ்சு தளமிருக்கே!)
2. பின்னூட்டங்களுக்கு பின்னூட்டம், அதற்கு இன்னொரு பின்னூட்டம் என்று இழுப்பது இல்லை. ஒரு முறை கருத்தைப் பதிவதோடு சரி.

வேற ஏதாவது இருப்பு இருந்தால் சொல்லுங்கள். முயற்சிக்கிறேன் ;-))))

Jaisakthivel said...

பரிசல்காரன் பற்றிய உங்கள் கருத்து
ஒரே சொதப்பலான கமென்ட்...
பெரியவர் லதானந்தா.. சீனியர் லதானந்த்தா..ஒன்றும் புரியவில்லை..
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.. யாறும் தனது சொந்த வேலையை விட்டுவிட்டு பதிவுகள் எழுதுவதாக நான் நினைக்கவில்லை. அவரவற்கு நேரம் கிடைக்கும் போது மட்டுமே பதிவுகள் இடப்படுகிறது, எழுதுகிறார்கள் என்பது எனது கருத்து.
-சர்வதேச வானொலிக்காக தங்க. ஜெய்சக்திவேல் பிபிசியில் இருந்து.
www.sarvadesavaanoli.blogspot.com