Mar 13, 2009

கல்லூரி - ஈயும் ஏரோப்ளேனும்

Posted by Picasa


அப்பக் கோயமுத்தூர் ஃபாரஸ்ட் காலேஜில ட்ரெயினிங் படிச்சிட்டு இருந்தேன். ட்ரெயினிங்குனா உங்கூட்டு ட்ரெயினிங் எங்கூட்டு ட்ரெயினிங் மாதிரியெல்லாம் இல்ல. செமக் கடுமையா இருக்கும். இந்தியாவுல இருக்குற அத்தனை மாநிலங்களிலேயிருந்தும் பயிற்சிக்கு வந்திருந்தாங்க. காடுகள் அத்தனைக்கும் கூட்டிகிட்டுப் போவாங்க. வேணும்னே கடுங் குளிர் இருக்குறப்போ ஊட்டில திறந்த வெளில டெண்ட் அடிச்சுத் தங்க வெப்பாங்க. பொறி பறக்குர சம்மர்ல ராஜஸ்தான் போகோணும். துப்பாக்கி சுடுற பயிற்சி, மாரத்தான் ஓட்டம், ரெகுலர் தியரி க்ளாஸ், சர்வே, இஞ்சினீரிங், சில்விகல்சர் அப்படினு ஒரு நிமிசங்கூட ஓய்விருக்காது. அடர்ந்த கானகத்துல தன்னந்தனியா ஓரொருத்தரையும் உட்டுப்போட்டு அவிங்க கைல ட்ரஷர் ஹண்ட் மாதிரி குறிப்புக்களைக் குடுத்துப் போடுவாங்க. அந்தக் குறிப்புங்களைச் சரியா டீகோட் பண்ணி அடுத்த எடத்துக்குப் போகணும். கைல மேப்பையும் காம்பஸையும் குடுத்துப் போடுவாங்க. அலஞ்சு திரிஞ்சு வழி கண்டுபிடிச்சு வந்து சேரோணும். அதுக்கு ஓரியெண்டேஷன் அப்படினு பேரு. சில பேரு டாப்ஸ்லிப்பிலிருந்து வழி தவறிக் கேரளாவில பூந்துருவாங்க. செரி! என்ர ட்ரெயினிங் பத்தித் தனிப்பதிவே போடலாம். அதுலயும் மாதப்பன் அடிச்ச கூத்து இருக்கே! அடோ சாமி!

இப்ப நாஞ் சொலப் போறது - அப்ப நான் கலந்துகிட்ட ஒரு போட்டி பத்தினது. கேக்கறீங்களா?

கோயமுத்தூர்ல G C T அப்படினு ஒரு இஞ்சினீரிங் காலேஜு இருக்குது. காலேஜ் டே விழாவுல அனைத்துக் கல்லூரி மாணவ மாணவியருக்கான போட்டிகள் நடத்தினாங்க. ஃபாரஸ்ட் காலேஜ் சார்பா நான் போயிருந்தேன்.

கவியரங்கம், பேச்சுப் போட்டில எல்லாம் மொதோ ப்ரைஸ் நாந்தான் வாங்கியிருப்பேன்னு ஒங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். அத விடுங்க. ஒரு வித்தியாசமான போட்டிலயும் எனக்குத் தான் ஃபர்ஸ்ட் ப்ரைஸ். நகைச்சுவையாப் பேசுற போட்டி. பட்டுக்கோட்டை பிரபாகர்னு ஒரு எழுத்தாளர்தான் ஜட்ஜு.

அதுல கலந்துகிட்டவிங்க நெம்பப் பேரு நகைச்சுவைத் துணுக்குத் தோரணங்களைச் சொன்னாங்க. சிலபேரு சிரிப்புக் கதைங்களைச் சொல்லிச் சிரிப்புக் கூட்டப் பாத்தாங்க.

பார்வையாளரான காலேஜுப் பசங்க “ஊ ஊ”னு ஊளச் சத்தம்போட்டு ஒவ்வொருத்தரையும் மூட் அவுட்டாக்கி நெம்ப கெலாட் பண்ரானுங்க.

நான் மேடையேறுனேன். அப்பப் பேசுனத நாபகம் இருக்குற வரையில இப்பத் திலும்பவும் சொல்ல ட்ரை பண்றேன்.

“அன்புள்ள அண்ணாமார்களே! அக்கா மார்களே! (ஊ ஊ ஊளச் சத்தம்) ஒரு சில அண்ணி (இடைவெளி விட்டு) மார்களே! (கைதட்டல்) ஒரு சில மச்சான்மார்களே (பயங்கரக் கைதட்டல்)

இப்ப ஒப்பீடுங்குறது நெம்ப அவசியமான விஷயமா இருக்கு. (சொல்ரா டேய்!) சொல்றனுங்க. அதனால ஈயுக்கும் ஏரோப்ளேனுக்கும் இருக்குற ஒற்றுமை வேற்றுமைகளைப் பத்திப் பேசலாம்னு இருக்கனுங்க. (கேனையா! சீக்கிரம் சொல்லிட்டுப் போடா... ஊஊ ஊ ஊ).

தேங்க்ஸுங்க. அதுல பாத்தீங்கன்னா ஈக்கும் இறக்கை இருக்கு. எரோப்ளேனுக்கும் இறக்கை இருக்கு. (கைதட்டல்). ஈ முட்ட வெக்குங்க. ஏரோப்ளேன்ல கோளாறு இருந்துதுனு வெயுங்க எங்காச்சும் கொண்டு போயி முட்ட வெச்சு ஆக்ஸிடெண்ட் ஆயுருமுங்க. (கூட்டம் ஊளையை நிறுத்திவிட்டுக் கைதட்டி ரசிக்க ஆரமிச்சுது.)

கோவிச்சுகாதீங்க. எக்ஸாம்ல் நீங்கல்லாம் பொதுவா என்ன பண்ணுவீங்க? காப்பியடிப்பீங்க! (டேய்! டேய்!) பொறுங்க! அதுவும் எந்தமாதிரி காப்பி? ஈயடிச்சாங் காப்பி! (சிவாஜி குரல்ல) ஆனா யாராச்சும் ஏரோப்ளான் அடிச்சாங் காப்பி அடிச்சிருக்கீங்களா? இல்லையே! (கைதட்டல்)

ஒங்க ப்ரொபசருங்க பலபேருட க்ளாஸ்ல ஈ ஓட்டிகிட்டு இருப்பாங்க. அவங்களால ஏரோப்ளேன் ஓட்ட முடியுமா? (பயங்கரக் கைதட்டல் – மாப்ளே அப்படிப் போட்ரா அருவாள)

இங்கிலீஷ் தமிழ் ரெண்டு பாஷையிலயும் ஈ அப்படிங்கிற எழுத்து இருக்கு. எரோப்ளான்கிற எழுத்து உண்டா சொல்லுங்க! (கைதட்டல்! டேய்! நீ பெரிய அறிவாளிடா)

ஈயப் பத்திப் படிக்கணும்னா ஜுவாலஜி புக்கப் பாக்கணும். ஏரோப்ளேனப் பத்திப் படிக்கணும்னா இஞ்சினீரிங் புக்கப் படிக்கணும்.. படிச்சாலும் என்ன புரிஞ்சிடப் போகுது? (டேய் டேய்!)

ஈரோடுனு ஒரு ஊரு இருக்குது. ஏரோப்ளேனூர்னு எதாச்சும் இருக்குதா சொல்லுங்க!

ஈ மாதிரியான பூச்சிங்களைக் கொல்லுறதுக்கு ஏரோப்ளேன்ல இருந்து மருந்தடிப்பாங்க. (தழுதழுத்த குரலில்) ஏரோப்ளானைக் கொல்ல ஈயால முடியுமா – சொல்லுங்கைய்யா - முடியுமா?(கைதட்டல்)

கடைசியா ஒண்ணு சொல்லி விடைபெறுகிறேனுங்க. ஏரோப்ளேன்ல் எராளமான பேரு ஒக்காரலாம். ஆனாப் பாருங்க.
ஒரு ஈ மேல மேக்ஸிமம் இன்னொரு ஈ மட்டும்தானுங்க ஒக்கார முடியும்.

**************************************************************

30 comments:

நாதஸ் said...

உங்க பதிவ படிச்சுட்டு "ஈ"ன்னு சிரிக்கலாம், "ஏரோப்ளேன்"னு சிரிக்க முடியாது :P

இராகவன் நைஜிரியா said...

தாங்க முடியலங்க...

ஈயும் ஏரோப்ளேனும் - மிக அழகான கம்பேரிசன்.

வாழ்க அறுவை திலகம், கடிமன்னர்.

இராகவன் நைஜிரியா said...

// சில பேரு டாப்ஸ்லிப்பிலிருந்து வழி தவறிக் கேரளாவில பூந்துருவாங்க. //

ஏங்க அந்த சில பேருல நீங்களும் உண்டுங்களா?

முரளிகண்ணன் said...

நல்ல நகைச்சுவை

வெட்டிப்பயல் said...

கலக்கல்...

//அன்புள்ள அண்ணாமார்களே! அக்கா மார்களே! (ஊ ஊ ஊளச் சத்தம்) ஒரு சில அண்ணி (இடைவெளி விட்டு) மார்களே! (கைதட்டல்) ஒரு சில மச்சான்மார்களே (பயங்கரக் கைதட்டல்)//

ஆரம்பமே அசத்தலா பண்ணிருக்கீங்க.

இதை காப்பி அடிச்சி யாராவது ப்ரைஸ் வாங்கிட போறாங்க...

valu said...

nice compartion

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ஒரு ஈ மேல மேக்ஸிமம் இன்னொரு ஈ மட்டும்தானுங்க ஒக்கார முடியும்.//


அப்பவே உங்க டச் ஆரம்பிச்சிட்டீங்க..!

பரிசல்காரன் said...

அங்கிள்..

நகைச்சுவையில உங்களை அடிச்சுக்க யாருமில்லைன்னு அப்பவே நிரூபிச்சிருக்கீங்க..

அப்புறம் அங்கிள்...

கேள்வி பதில் போட்டு நெம்ப நாளாச்சே.. போட்டா என்னா???

Sinthu said...

அப்பா நீங்கள் நல்லாகத் தான் படித்திருக்கிறீர்கள்.

வால்பையன் said...

இது ஈ படிச்சா ரொம்ப சந்தோசப்படும்

Rajaraman said...

பதிவு சுவாரஸ்யமாக இருந்தது. உங்க Training பற்றி இன்னும் விரிவாக பதிவிடுங்களேன்.

அது சரி எங்க சார் ரொம்ப நாலா காணல.

நிஜமா நல்லவன் said...

/nathas said...

உங்க பதிவ படிச்சுட்டு "ஈ"ன்னு சிரிக்கலாம், "ஏரோப்ளேன்"னு சிரிக்க முடியாது/


கன்னா பின்னான்னு ரிப்பீட்டு போட்டுக்கிறேன்...:)

VIKNESHWARAN ADAKKALAM said...

:) கடைசிய பரிசு ஆருக்கு கடைச்சது சொல்லலிங்களே :))

நிஜமா நல்லவன் said...

/இராகவன் நைஜிரியா said...

// சில பேரு டாப்ஸ்லிப்பிலிருந்து வழி தவறிக் கேரளாவில பூந்துருவாங்க. //

ஏங்க அந்த சில பேருல நீங்களும் உண்டுங்களா?/


இராகவன் அண்ணா....நல்லாத்தான் கேக்குறீங்க...:)

நிஜமா நல்லவன் said...

/பொறி பறக்குர சம்மர்ல ராஜஸ்தான் போகோணும்/

பொறி ஜீவா நடிச்ச படம்...நீங்க கம்பேர் பண்ணுற ஈ கூட ஜீவா நடிச்ச படம் தான்....ஆஹா...என்ன ஒற்றுமை...:)

நிஜமா நல்லவன் said...

/அந்தக் குறிப்புங்களைச் சரியா டீகோட் பண்ணி அடுத்த எடத்துக்குப் போகணும்./

அது சரி..ஈயடிச்சான் காப்பி மாதிரி டீகோட் பண்ணுறதை காப்பிகோட் பண்ணி இருக்கீங்களா???

நிஜமா நல்லவன் said...

சரி நான் கிளம்புறேன்...ஒருத்தர் என்னை இங்க வாங்க கும்மலாம்ன்னு கூப்பிட்டார்...நான் கமெண்ட் போட்டதும் பயமுறுத்துறார்...என்ன செய்றது இப்ப????

நிஜமா நல்லவன் said...

/ஒரு சில மச்சான்மார்களே (பயங்கரக் கைதட்டல்)/


ம்ம்ம்...ஒரு மார்க்கமா தான் பேசி இருக்கீங்க...:)

நிஜமா நல்லவன் said...

ஒன்னு சொல்ல மறந்துட்டீங்க....ஈ ய நாம அடிச்சா சாகும்....ஆனா எரோப்ப்ளேன் எங்கயாவது இடிச்சா நாம சாவோம்..:)

நிஜமா நல்லவன் said...

ஏரோப்ளேன் ஓட்டுறவருக்கும் ஈ ய கண்டா அலர்ஜி தான்....ஆனா ஈ ஓட்டுறவருக்கு ஏரோப்ளேன் கண்டா அலர்ஜி வருமா???

மங்களூர் சிவா said...

/
nathas said...

உங்க பதிவ படிச்சுட்டு "ஈ"ன்னு சிரிக்கலாம், "ஏரோப்ளேன்"னு சிரிக்க முடியாது :P
/

repeat....
:)))

சிவக்குமரன் said...

சில்விகல்சர்-ஆ சிவில் கல்ச்சர்-ஆ?

லதானந்த் said...

நாதாஸ்!
அட! இந்தப் பாயிண்டையும் நான் பேசினேன். எழுத மறந்திட்டேன்.

இராகவன் நைஜீரியா!
நெம்ப நாளாச்சு எனக்குப் பட்டம் கெடைச்சு. நன்றிங்க. கேரளாவில நானும் பூந்திருக்கேன். ஆனா வழி தவறி அல்ல.

முரளிக் கண்ணன்!
நெம்ப நாளா என்னைய சகிச்சுகிட்டுப் படிக்கிறிங்க தேங்க்ஸுங்க.

வெட்டிப்பயல்!
ட்ரண்ட் செட்டர்னா நாலு பேரு காப்பி அடிக்கத்தான் செய்வாங்க. எல்லார்கிட்டயும் அன்பா இருங்க.

சுரேஷ்!
ஒங்க கமெண்ட்ட நான் பாராட்டாவே எடுத்துக்கிறேன்.

வாலு!
நன்றிங்க. ஆமா! ஒங்களுக்கு இங்கிலீஷ்னா நெம்பப் பிரியம்போல!

சுரேஷ்!
ஒங்க கமெண்ட்ட நான் பாராட்டாவே எடுத்துக்கிறேன்.

பரிசல்காரன்!
நெம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க! நன்றி! கேள்வி பதில்தானே? போட்ரலாம்.

சிந்து!
ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!
”அப்பா” னு நீங்க சொன்னது ஆச்சரியத்தின் வெளிப்பாடா இல்ல father அப்படிங்கிற அர்த்தத்திலா?

வால்பையன்!
படிச்சா ஈ சந்தோஷப்படும். குடிச்சா?

ராஜாராமன்!
ட்ரெயினிங் பத்தி விவரமாப் பதிவு போடரேன்.
நீங்கதான் நெம்ப நாளாக் காணலை.

நிஜமா நல்லவன்!
ஒங்களுக்கு The Great Repeater அப்படினு பட்டம் குடுக்கிறேன். கேரளா பூந்திருக்கேன். ஆனா வழி தவறி அல்ல.
சங்க இலக்கியப் பாடல்களை ஆராய்ச்சி பண்ணுற அள்வுக்கு ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க. சாருக்கு நெம்ப ஓய்வு நேரம் இருக்குது போல ஹிஹி!
எனக்குக் கமெண்டு போட்டா மிரட்டலா? அட அக்குறும்பே?

மங்களூர் சிவா!
தொடர்ந்து படிக்கிறீங்க. நன்றி.

சிவக்குமாரன்!
silva என்றால் மரம் என்று பொருள் silviculture என்றால் மரவளர்ப்பியல் என்று பொருள்

விக்னேஷ்வரன்!
கடைசிப் பரிசு அல்ல. முதல் பரிசுதான். பதிவை மறுக்காப் படிக்கவும்க்.

நிஜமா நல்லவன் said...

ரொம்ப நன்றி!


The Great Repeater!

பூக்காதலன் said...

நீங்க அப்பயே இப்படிதானா?

சிவக்குமரன் said...

///சிவக்குமாரன்!
silva என்றால் மரம் என்று பொருள் silviculture என்றால் மரவளர்ப்பியல் என்று பொருள்///
நன்றிங்க

நிஜமா நல்லவன் said...

பட்டத்துக்கு நன்றி!

பதிவு போட்டுட்டேன்...:)

சுரேகா.. said...

அய்யய்யோ!

நிஜமா நல்லவன் மூலமா வந்தேன்.

லேசா புன்னகையில் ஆரம்பிச்சு...
சிரிப்பாகி..
கடைசிவரியில்..வெடிச்சிரிப்பா மாறுது!

கலக்கிட்டீங்க

லதானந்த் said...

பூக்காதலன்!
என்ன சொல்ல வர்ரீங்க?

நிஜமா நல்லவன்!
படிச்சிட்டேன். கமெண்டும் போட்டுட்டேன். நிஜமாவே என்னமோ ஸ்பெஷலா இருக்குங்க ஒங்ககிட்ட? என்னையவே கமெண்ட் போட வெச்சிட்டிங்களே?

Venkatesh Kumaravel said...

உங்களது சங்கமம் போட்டி கதை குறித்த எனது எளிய கருத்துக்களை இங்கே உரைத்திருக்கிறேன். ஒரு முறை வாசித்து பாருங்களேன்.
http://paathasaari.blogspot.com/2009/04/blog-post_01.html