Jul 5, 2009

திருக் குறளும் தெருக் குரலும்



அப்ப மெட்ராஸில செரியான மழை. சவுட்டி எடுக்குது. அந்தக் கார்க் கமபனியில் இருந்து வாடிக்கையாளர் ஒருத்தருக்கு சப்ளை பண்றதுக்காக சில உதிரி பாகங்களை அண்ணைக்கே அனுப்பியாகணும். கம்பனிக்குள்ளயே வேர் ஹவுஸிலிருந்து டெஸ்பாட்ச் பண்ற இடத்துக்குப் போற வழியில தோள் அளவுக்கு வெள்ளம் ஓடிகிட்டு இருக்குது. ராத்திரி மணி எட்டரை. இருட்டுக் கட்டிகிட்டு இருக்குது. சுமாரா 10 கிலோ எடை இருக்குற அந்தப் பார்சல வேர் ஹவுஸில் இருந்து அனுப்புற எடத்துக்கு ஒர்க்கருங்க ஆரும் கொண்டு போகமுடியாதுனு சொல்லிப்போட்டாங்க. கம்பனி வெளிநாட்டுக் கம்பனி. டயத்துக்குப் பொருளை அனுப்பறத ஒரு கவுரமா நெனைக்கிற கம்பனி.

அந்தச் சமயத்துல அங்க அந்த வருசம்தான் மெரிட்ல ப்ளேஸ்மென்ட் ஆயிருந்த இளம் மெக்கானிக்கல் இஞ்சினீயர் ஒரு எளந்தாரி இருந்தான். காருண்யா யூனிவெர்சிடியில மொதோ ரேங்க் வாங்குனவன் அவன். இன்ஃபோஸிஸ் மாதிரியான கம்பனிகளிலேயும் ப்ளேஸ்மெண்ட் கெடைச்சும் இந்த வேலைய விரும்பித் தேர்ந்தெடுத்தவன் அவன்.

அந்த இஞ்சினீயர் பையன் என்ன பண்ணுனான்னா அந்தப் பார்சலை மழை நனையாம உண்ணம் நல்லாப் பேக் பண்ணிட்டுத் தன்னோட தலைல வெச்சுகிட்டு விறுவிறுனு தோள் அளவுக்குப் பாயுற வெள்ளத்தில, கொட்டுற மழையில, வேர் ஹவுஸிலிருந்து டெஸ்பாட்ச் செக்‌ஷனுக்கு சுமாரா 1 கிமீ கொண்டுபோய்ச் சேர்த்துட்டான்.

அண்ணைக்கே அது போய்ச்சேர வேண்டிய எடத்துக்குப் போயிருச்சு. இதொண்ணும் தெரியாம கார்க் கம்பெனியிலிருந்து, ”பொருளை அனுப்ப ரண்டு நாளாகும்”னு மெயில் அனுப்பியிருக்காங்க. “இல்லையே! பொருள் டயத்துக்கு வந்திருச்சே”னு பதில் மக்கா நாளு வந்திருச்சு. கம்பனிக் காரவிங்களுக்கு நெம்ப ஆச்சரியமாப் போச்சு. அப்பறம் நடந்தது என்னனு வெசாரிச்சுத் தெரிஞ்சுகிட்டாங்க.


உண்ணொரு சம்பவம். கம்பனி ஸ்டாஃப் அல்லாத்தையும் கூட்டிட்டு வந்து திலும்பக் கொண்டு போயி உடறதுக்கு ஒரு பஸ் இருக்குது. ஒரு நாளு சாயங்காலம் அந்த பஸ் வந்துகிட்டு இருக்கறப்போ ட்ரைவருக்கு திடீல்னு நெஞ்சு வலி வந்து மயங்கிட்டாரு.

அல்லாரும் பதறிப்போட்டாங்க. ஒரு சீனியர் மேனேஜரு சீக்கிரம் ஆம்புலன்ஸ வரவெக்கப் போன் பண்ணப் போனாரு. அப்ப அதே இஞ்சினீயர் பையனும் அந்த பஸ்ல இருந்திருக்கான். அமைதியா எந்திருச்சு வந்து, ”எங்கிட்ட ஹெவி வெஹிக்கிள் லைஸென்ஸுங்கூடி இருக்குது! பாருங்க! நானே பஸ்ஸ ஆஸ்பத்திரிக்கு ஓட்டிட்டிடுப் போறன்” அப்படினு சொல்லிப்போட்டு மவுண்ட் ரோடு சாயங்கால ட்ராபிக்ல அனாயசிமாப் பஸ்ஸ ஓட்டி ஆஸ்பத்திரியில ட்ரைவரைச் சேத்திப்போட்டு பஸ்ல வந்த முச்சூட்டுப் பேரையும் - கடைசி நெலை ஒர்க்கர் வரைக்கும் - அவிங்கவிங்க ஊடுகள்ல உட்டுப்போட்டு, பஸ்ஸையும் கம்பனியில ஒப்படைச்சிட்டு அதுக்கப்பறம் தன்ர ரூம்புக்குப் போகப் பஸ்ஸோ ஆட்டோவோ கெடைக்காததால ஆப்பீஸிலயே ஒரு பெஞ்சியில படுத்துத் தூங்கிப்போட்டு பொழுது விடிஞ்சதும் அடுத்த நாளு வேலைகளைக் கவனிக்க ஆரமிச்சிட்டான்
.

இதையெல்லாம் அந்த இஞ்சினீயர் பையன் கூட வேலை செய்யற உண்ணொருத்தர் மூலமாத் தெரிஞ்சுகிட்டேன். நெம்ப சந்தோஷமா இருந்துச்சு.

’சண்டைனு வந்தாப் பல்லை ஒடைக்கவும் தெரியுது. வேலைனு வந்தா செஞ்சு முடிக்கவும் தெரியுது’னு எனக்கு நெம்ப நிதாயிருச்சு.

கிரிதரோட இந்த ரண்டு மேட்டரையும் அப்பநாய்க்கம்பாளையம் அரங்க முத்துச்சாமி அய்யா கிட்டச் சொன்னேன்.

அவரு சொல்றாரு.

”உண்மைதான்!

”தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்படும்”

திருக்குறள் சொன்னால் என்ன – அதைத் தெருக்குரல் திரும்பச் சொன்னால் என்ன? - உண்மை உண்மைதான்!”



*********************************************************************************



14 comments until now.

cheena (சீனா) + Sunday, July 05, 2009 (#) :

உண்மை உன்மை - தக்கார் எனத் தீர்மானிக்க உதவிய அப்பையனின் அரிய செயல் பார்ராட்டுதலுக்குரியது அல்லவா

நல்லா இருக்கு லதானந்த்

முகவை மைந்தன் + Sunday, July 05, 2009 (#) :

வேலையில் அர்ப்பணிப்பு மேலோங்கி இருக்கிறது அந்த இளைஞரிடம். வாழ்த்துகள்.

லதானந்த் + Sunday, July 05, 2009 (#) :

சீனா!
நெம்ப தேங்க்ஸ்!

முகவை மைந்தன்!
அவன் என் மைந்தன்!

நிகழ்காலத்தில்... + Sunday, July 05, 2009 (#) :

மிக நிச்சயமாய் அந்த இளைஞர் வாழ்வில் உயர்நிலைக்கு வருவார்.,

வாழ்த்துக்கள்

வெண்பூ + Sunday, July 05, 2009 (#) :

இதுல ஒரு ஆச்சர்யமும் இல்லை அங்கிள்... கிரிதர் எப்படி பூனையா போய்டுவாரா என்ன? :))))

அந்த பழமொழிய முழுசா சொல்லலாம்னுதான் நெனக்கிறேன், ஃபோட்டோல உங்க யூனிஃபார்ம பாத்து மக்கள் தப்பா புரிஞ்சுக்குவாங்களேன்னு விடுறேன்.. :))))

வெண்பூ + Sunday, July 05, 2009 (#) :

இதுல ஒரு ஆச்சர்யமும் இல்லை அங்கிள்... கிரிதர் எப்படி பூனையா போய்டுவாரா என்ன? :))))

அந்த பழமொழிய முழுசா சொல்லலாம்னுதான் நெனக்கிறேன், ஃபோட்டோல உங்க யூனிஃபார்ம பாத்து மக்கள் தப்பா புரிஞ்சுக்குவாங்களேன்னு விடுறேன்.. :))))

மங்களூர் சிவா + Sunday, July 05, 2009 (#) :

great!
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

ஜோசப் பால்ராஜ் + Sunday, July 05, 2009 (#) :

கிரிதருக்கு வாழ்த்துக்கள்.

இரா. வசந்த குமார். + Sunday, July 05, 2009 (#) :

வாழ்த்துக்கள்.

Vijayashankar + Sunday, July 05, 2009 (#) :

மகனுக்கு வாழ்த்துக்கள். காருண்யா? உங்கள் எழுத்துக்கு அனேக நமஸ்காரங்கள். திருக்குறள் என்னை எங்கேயோ அழைத்துச்சென்றது.

இப்போ உங்க மகன்கள் வாழ்வது வெளிநாடா? Success in India, but succeed elsewhere, அப்பா சொல்லுவார்!

உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது! தெளிவு!

அப்பாவிடம் மகன்கள் கற்றுக்கொள்வது ஒருவகை. அண்ணன் தம்பிகளிடம் ஒரு வகை. ஆனால், நண்பர்களிடம் கற்றுக்கொள்ள ஈடு இணை இல்லை!

சரி அந்த கம்பெனி முதல் மூன்று எழுத்து சொல்லுங்க? டி.என்.டி / பெடெக்ஸ்.

ஹெவி டிரைவிங் லைசென்ஸ் எப்படி எடுக்கிறது?

அப்புறம், ட்ரெக்கிங் வர இயலாமை. அடுத்த முறை (ஜூலை கடைசி , கோவை வரும் பொது, சந்திக்கிறேன்!)

சந்திரமௌளீஸ்வரன் + Monday, July 06, 2009 (#) :

இவன் தந்தை.... எனும் சொல்லை உங்களுக்கு ஈட்டித் தந்த உங்கள் செல்வனுக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்

அவையில் முந்தியிருக்கச் செய்த உங்கள் முயற்சியே உங்கள் மகனின் செயலாக வெளியானது

KEEP IT UP SIR

☼ வெயிலான் + Monday, July 06, 2009 (#) :

கிரிதருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!!!

லதானந்த் + Monday, July 06, 2009 (#) :

நிகழ்காலத்தில், மங்களூர் சிவா, வசந்த குமார், சந்திரஔளீஸ்வரன், ஜோ!
மிக்க நன்றி!

வெண்பூ!
வாழ்த்துக்கு நன்றி!
அது யூனிஃபார்ம் இல்லை.
காட்டினுள் போகும்போது கெமோஃப்ளாக் எஃபக்டுக்காக அணிவது.
எனக்குக் கீழ்நிலைப் பணியில் உள்ளவர்கள்தான் யூனிஃபார்ம் அணிவர்.

விஜயஷங்கர்!
நன்றி! உங்களின் சில கேள்விகளுக்குக் கேள்வி பதில் பகுதில் விடை கிடைக்கலாம்.

வெயிலான்!
அட! நீங்களா?

லதானந்த் + Monday, July 06, 2009 (#) :

அன்புள்ள ‘நான் அறிவாளி இல்லை’ அவர்களுக்கு,
என்னை lathananth@gmail.com எனும் முகவரியில் தொடர்புகொள்ள முடியுமா?